உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

 பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது

உத்தமபாளையம், நவ. 14- அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் சின்னமனூர் அருகே உள்ள டி. சிந்தலச்சேரியில் தேவாரம் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் ஜோதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்த 6 நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, கம்பி போன்ற ஆயுதங்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த புவனேஸ்வரன் 35, ராம்குமார் 32, சதீஸ்வரன் 25, ராம்குமார் 30, அழகு நதி 35, செக்கு மைதீன் தெரு அழகர்சாமி 55 எனத் தெரிந்தது. சின்னமனூரில் நடந்த கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. அவர்கள் மீது ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ