உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீபாவளிக்காக தேனி ஆவினில் 6 டன் மைசூர்பாக் தயாரிப்பு

தீபாவளிக்காக தேனி ஆவினில் 6 டன் மைசூர்பாக் தயாரிப்பு

தேனி: தேனி ஆவின் மூலம் தீபாவளி பண்டிகைக்காக 6 டன் மைசூர்பாக் தயாரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி ஆவின் மூலம் பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பால் குளிரூட்டப்பட்டு மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அனுப்பபடுகிறது. சில மாதங்களாக தேனி தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் குளிரூட்டும் மையத்தில் பாதாம் பால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மைசூர்பாக் தயாரிப்பு துவங்கி உள்ளது. இதுபற்றி ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் மூலம் மாதந்தோறும் சுமார் ஒரு டன் பாதாம் பவுடர் தயாரித்து சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். தீபாவளியை முன்னிட்டு 1.5 டன் பாதாம்பால் பவுடர் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இது தவிர இந்தாண்டு முதன்முறையாக மைசூர்பாக் தேனி ஆவினில் தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம். இதற்காக கடந்த சில நாட்களில் 50 கிலோ மைசூர்பாக் தயாரித்துள்ளோம். அதனை 50 கிராம் அளவில் ஆவின் பாலகங்களில் விற்பனைக்கு வைத்துள்ளோம். சுவை உள்ளிட்டவை தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கள் கேட்டு வருகிறோம். கருத்துக்கள் அடிப்படையில் தரம், சுவை மேம்படுத்தி தீபாவளி பண்டிகைக்காக சுமார் 6 டன் மைசூர்பாக் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை