உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில போட்டிக்கு 675 பேர் தகுதி

மாநில போட்டிக்கு 675 பேர் தகுதி

தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்டத்தில் முதலிடங்களை வென்ற சுமார் 675 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆக.,26 முதல் செப்., 10 வரை நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் நடந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் 37ஆயிரத்திற்கும் அதிகமானோர் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 ஆயிரம் பேர் போட்டிகளில் பங்கேற்றனர். பதிவு செய்த பலரும் பங்கேற்கவில்லை. போட்டிகளில் முதலிடம் பிடித்த 675 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி