தேனீக்கள் கொட்டி 9 பேர் காயம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரம் விலக்கிலிருந்து அம்மச்சியாபுரம் செல்லும் ரோட்டில் நந்தீஸ்வரர் கோயில் அருகே நேற்று காலையில் நடந்து சென்றவர்களை தேனீக்கள் கொட்டியது. கோத்தலூத்து சரவணன் 41, வீரசின்னம்பாள்புரம் ராஜபாண்டி, மரிக்குண்டு நந்தகுமார் 23, தேக்கம்பட்டி சண்முகம் 36 உட்பட 9 பேர் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.