மேலும் செய்திகள்
பலசரக்கு கடையில் தீ விபத்து
30-Sep-2025
கம்பம்: கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டில் கம்பமெட்டு காலனி அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. கம்பமெட்டு காலனி முகமது ஹக். இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன், தனக்கு சொந்தமான காரில் திண்டுக்கல்லில் நடக்க இருந்த தனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க சென்றார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் காரின் பின் பகுதியில் புகை வந்துள்ளது. புகை வருவதை கண்ட ஹக், அவரது குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கி உள்ளனர். இறங்கிய மறு நிமிடமே கார் தீப்பற்றி எரிந்தது. கார் தீப்பற்றி எரிய துவங்கியதுமே, அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர். பின்னர் கார் மளமளவென எரிந்து சாம்பலானது. தீயணைப்புத் துறையினர் கடைசியில் வந்து தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்ததற்கு எலக்ட்ரிக் சர்கியூட்டில் ஏற்பட்ட உரசல் தான் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Sep-2025