|  ADDED : மார் 15, 2024 06:41 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
தேவதானப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சோலைமலை மனைவி லட்சுமி 45. இவர் கருப்பமூப்பன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர்  வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்து மனைவியை  அடித்து துன்புறுத்தியுள்ளார்.  தேவதானப்பட்டி மூங்கிலணை  காமாட்சியம்மன் கோயிலுக்கு  லட்சுமி தனியாக வந்தார்.  சுவாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் போது,  அங்கிருந்து டூவீலரில் புறப்பட தயாரான இவரது கணவர் சோலைமலையை  பார்த்தார். சோலைமலையுடன், நாகஜோதி, மகன் ஹரி கிருஷ்ணன் வந்திருந்தனர். இவர்கள் யார் என லட்சுமி கேட்டதற்கு,  மூன்று பேரும் லட்சுமியை கரும்பால்  அடித்து காயப்படுத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் லட்சுமி அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி  போலீசார் சோலைமலை, நாகஜோதி, ஹரி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.