உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூடோவில் வெண்கலம் வென்ற கல்லுாரி மாணவர்

ஜூடோவில் வெண்கலம் வென்ற கல்லுாரி மாணவர்

உத்தமபாளையம் : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து. பின் மாநில அளவில் நடந்தது. மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டிகளில் 73 கிலோ எடை பிரிவில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர் யோகேஷ் வெண்கல பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச். முகமது மீரான் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலியையும் பாராட்டினார்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !