உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருமண நாள் கொண்டாட வந்தவரிடம் வழிப்பறி

திருமண நாள் கொண்டாட வந்தவரிடம் வழிப்பறி

பெரியகுளம்: திருமணம் நாள் கொண்டாட பெரியகுளம் வந்தவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு வெங்கட்ராமன் 31. கோவை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணம் நாள் கொண்டாடுவதற்கு தனது நண்பர் எழில்வேந்தனுடன் கோவையில் இருந்து பெரியகுளம் வந்தார். அரசு போக்குவரத்து டெப்போவில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு செல்லும் போது, ஆட்டோவில் இருவர் ஏறினர். தண்டுப்பாளையம் முத்தையா கோயில் அருகே இறங்கி வெங்கட்ராமன், எழில்வேந்தனுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவருடன் ஆட்டோவில் பயணித்த இருவர் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லாததால் வெங்கட்ராமன் ஆண்ட்ராய்டு அலைபேசியை பறித்து தப்பினர். பாதிக்கப்பட்டவர்கள் புகாரில், தென்கரை போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி