உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  உப்பார்பட்டி டோல்கேட் அருகே தீ பற்றிய பைப் ஏற்றி வந்த லாரி

 உப்பார்பட்டி டோல்கேட் அருகே தீ பற்றிய பைப் ஏற்றி வந்த லாரி

தேனி: கம்பத்தில் இருந்து தேனி நோக்கி போர்வெல் லாரிவந்தது. அந்த லாரியுடன் மற்றொரு லாரி குழாய்கள் ஏற்றி வந்தது. உப்பார்பட்டி டோல்கேட்டிற்கு வந்த போது லாரியின் பேட்டரி வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பற்றியது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தேனி தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவம் பற்றி வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்