உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்சிப் பொருளான கண்காணிப்பு கேமரா

காட்சிப் பொருளான கண்காணிப்பு கேமரா

கூடலுார்: கூடலுார் அருகே கருநாக்கமுத்தம்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி பல குற்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதனை தடுப்பதற்காக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முயற்சியில் சில மாதங்களுக்குமுன் பஸ் ஸ்டாப், அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன்மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததால் குற்றங்கள் ஓரளவு தடுக்கப்பட்டது. இந்நிலையில் பல இடங்களில் கேமராக்கள் சேதம் அடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.இதனால் மீண்டும் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. முழுமையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை