உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் விபத்து அபாயம்; நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

தேனி அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் விபத்து அபாயம்; நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

தேனி : தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் செல்லும் பைபாஸ் ரோட்டில் தடுப்புகள், சிக்னல்கள் சேதமடைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியகுளம், திண்டுக்கல், திருச்சி செல்லும் பஸ்கள் அன்னஞ்சி பைபாஸ் ரோடு வழியாக செல்கின்றன. தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் சில நேரங்களில் கம்பம், போடி வழி செல்லும் பஸ்களும் இவ்வழியாக திருப்பி விடப் படுகின்றன. இந்த பைபாஸ் ரோட்டில் ரோட்டின் எல்லைகளை குறிப்பிடும் எதிரொலிப்பான்கள் பல இடங்களில் இல்லை. அதே போல் வேகத்தை கட்டுப்படுத்தி வர சமிக்கை காட்டும் சிக்னல்களும் சேதடைந்துள்ளன. விபத்துக்களை தடுக்க எதிரொலிப்பான்கள், சிக்னல்களை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை தேனி உதவி பொறியாளர் ராஜசேகரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை