உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் ஸ்டாப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை

பஸ் ஸ்டாப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை

தேனி: தேனி பங்களாமேட்டில் திறந்தவெளி மதுபாராக செயல்படும் பஸ் ஸ்டாப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி பங்களா மேட்டில் தெற்கு பகுதியில் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இங்கு பஸ்கள் நின்று செல்வது கிடையாது. இதனால் பொது மக்கள் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு அருகே வெயிலில் பஸ்சிற்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பை மறைத்து எப்போதும் லாரிகள் நிற்பதும், புதன், ஞாயிறு ஆகிய நாட்களில் மீன் இறைச்சி விற்பனை நடப்பதால் பொது மக்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் பஸ்கள் நிறுத்தி செல்லப்பட்டது. ஆனால் தற்போது பஸ்கள் நிறுத்துவது இல்லை. ஆக்கிரப்புகளும் அதிகரித்துவிட்டன. பஸ் ஸ்டாப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ