உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு

மனநலம் பாதித்தவர் காப்பகத்தில் சேர்ப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் ரோட்டில் சுற்றித் திரிந்த மனநலம் பாதித்தவர் மருத்துவமனை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.தேவதானப்பட்டி ரோட்டில் ஆதரவற்ற நிலையில் 40 வயதுடைய மனநலம் பாதித்த ஆண் ஒருவர் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சுற்றினார். இவரை தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா, எஸ்.ஐ.,க்கள் மணிகண்டன், ஜான்செல்லத்துரை ஆகியோர் பாதுகாப்புடன், ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரஞ்சித்குமாரிடம் ஒப்படைத்தனர். அவர், மனநலம் பாதித்தவரை மீட்டு தலைமுடி வெட்டி, குளிக்க வைத்து,அழுக்கேறிய ஆடையை மாற்றி புத்தாடை வழங்கினார். இவரது சேவையை பொது மக்கள் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இயங்கும் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் பாதிக்கப்பட்ட நபர் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை