உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

பெரியகுளம் : தொடர் மழையால் பெரியகுளத்தில் கலங்கலான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.பெரியகுளம் நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியில் இருந்து வாய்க்கால் வழியாக சோத்துப்பாறை அணைக்கு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் குழாய் தொட்டிக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. தினமும் 58 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தற்போது பேரிஜம் ஏரி, சோத்துப்பாறை அணை பகுதியில் பெய்யும் தொடர்மழையால் மழைநீர் கலங்கலாக வருகிறது.இதனால் பெரியகுளத்தில் இரு நாட்களாக கலங்கலான குடிநீர் சப்ளையாகிறது. சில பகுதிகளில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் குடிக்க முடியவில்லை. இதனால் சிலர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.இது குறித்து நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில்: சில தினங்களாக பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது. அணையின் மேற்பகுதி கரையோரம் மண் சரிவினால் கலங்கலாக வரும் குடிநீரை, சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது மூன்று முறை குளோரினேசன் செய்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் கலங்கலாகவே வருகிறது. எனவே குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை