உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆண்டிபட்டியில் நக்சல் தடுப்பு சிறப்பு அதிரடிபடை ஆய்வு முகாம் அமைக்க ஆலோசனை

 ஆண்டிபட்டியில் நக்சல் தடுப்பு சிறப்பு அதிரடிபடை ஆய்வு முகாம் அமைக்க ஆலோசனை

தேனி: தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும், கேரள எல்லை பகுதியிலும் அமைந்துள்ளது. மலை பகுதிகளில் நக்சல் தடுப்பு தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நக்சல் தடுப்பு பிரிவு சில ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிபடை யுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிபடை பிரிவினர் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு, ராஜதானி, வருஷநாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ராஜதானி போலீஸ் குடியிருப்பு பகுதியில் முகாம் அமைக்க ஆலோசித்துள்ளனர். தொடர்ந்து நக்சல் தடுப்பு பணிகள், மலைகளில் ரோந்து பணி கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர். இந்தியா முழுவதும் நக்சல்கள் மாநில அரசு களிடம் சரணடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நக்சல் தடுப்புபணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ