ஆலோசனை கூட்டம்
தேனி: தேனி அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், கட்சி சார்பில் மாநில அரசை கண்டித்து அக்.,8ல் நடக்க உள்ள மனித சங்கில் போராட்டம் நடத்துவது, அக்.,9ல் மதுரையில் நடைபெறும் உண்ணாவிர போராட்டத்தில் பங்கேற்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றியச் செயலாளர்கள் அன்னபிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் சோலைராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.