மேலும் செய்திகள்
அ.தி.மு.க., 54வது ஆண்டு துவக்க விழா
18-Oct-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., 54 ஆம் ஆண்டு துவக்க விழா மாவட்டச் செயலாளர் ராமர் தலைமையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஓடைத்தெருவில் ஜெ., நினைவு படிப்பகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., தவசி, ஒன்றிய அவைத்தலைவர் மதியரசன், ஒன்றிய பொருளாளர்கள் செல்வம், லோகநாதன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் பொன்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
18-Oct-2025