உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று பிரசாரம்

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று பிரசாரம்

ஆண்டிபட்டி: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று இரவு ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்கிறார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்று தொகுதி வாரியாக தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வ ருகிறார். நான்காம் கட்ட பயணமாக தேனி மாவட்டத்திற்கு இன்று (செப்.4ல்) வருகை தருகிறார். பிரசார கூட்டத்திற்கான இடம் ஆண்டிபட்டி - க.விலக்கு இடையே கரிசல்பட்டி விலக்கு அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரசார கூட்ட முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் தலைமையில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ரதிமீனா சேகர், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். பொதுமக்கள் கூடும் இடம், வாகனம் நிறுத்துமிடம், மின் விளக்கு வசதி குறித்து ஆர்.பி. உதயகுமார் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ