முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பெரியகுளம்: வடுகபட்டி சங்கரநாராயணன் நினைவு நடுநிலைப்பள்ளிகளில் (1986 ---1994) ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தி ஆசி பெறுதல், குடும்ப நண்பர்கள் சந்திப்பு என முப்பெரும் விழா நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். பள்ளிக்கு கிரிக்கெட் பேட், கேரம்போர்டு, வாலிபால் உட்படவிளையாட்டு உபகரணங்களும், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் பள்ளிகால பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.