உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.40 ஆக உயர்வு பருவமழையால் செடியிலே அழுகியது

ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.40 ஆக உயர்வு பருவமழையால் செடியிலே அழுகியது

பெரியகுளம்: வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.15 க்கு விற்ற தக்காளி, நேற்று பெரியகுளம் பகுதிக்கு ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.40 க்கு விற்பனையானது. பெரியகுளம் தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட தென்கரை காய்கறி மார்க்கெட், தேவதானப்பட்டி காய்கறி மார்க்கெட் உட்பட பல்வேறு காய்கறி கடைகளில் தினமும் 10 டன் முதல் 12 டன் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சுபமுகூர்த்தம் காலங்களில் இரு மடங்கு தேவை அதிகரிக்கும். மேல்மங்கலம், எ.புதுப்பட்டி, ஜல்லிபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உட்பட பல பகுதிகளில் தக்காளி விளைச்சல் உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.15 க்கு விற்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் செடிகளில் தக்காளி அழுகியது. இதனால் மார்கெட்டிற்கு வரத்து குறைந்தது. வத்தலக்குண்டு, தேனி, ஆண்டிபட்டி கமிஷன் கடைகளிருந்து பெரியகுளம் பகுதிக்கு வரத்து குறைய துவங்கியது. ஆந்திராவிலிருந்து 10 டன்: தேனி மாவட்டத்தில் தக்காளி வரத்து குறைந்ததால், பெங்களூர் தக்காளி வரவழைக்கப்படும். அங்கும் மழை பெய்ததால், நேற்று பெரியகுளம் பகுதிக்கு ஆந்திராவிலிருந்து லாரியில் 10 டன் தக்காளி வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்கப்பட்டது. காய்கறி வியாபாரி ராஜா கூறுகையில்: ஆந்திரா தக்காளி பக்குவமாக வைத்துக்கொண்டால் 5 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும். தொடர்ந்து மழை பெய்தால் தக்காளி கிலோ ரூ.100-யை கூட தொடலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி