மேலும் செய்திகள்
பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது வழக்கு
04-Dec-2024
ஆண்டிபட்டி : உத்தரபிரதேசம் மாநிலம் ராகிபுர் கவுஞ்சாரி பகுதி பீம்சிங் 43. இவர் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். ஐந்தாண்டுகளாக பணிபுரிந்தவர், நேற்று முன் தினம் வேலை முடித்து விட்டு, தான் தங்கியிருந்த அறையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருடன் இருந்த நண்பர்கள், கம்பெனி காரில் பீம்சிங்கை கொண்டு சென்று ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடன் இருந்தவருக்கு தமிழ் தெரியாது. இதனால் தமிழ், ஹிந்தி தெரிந்த கம்பெனி உரிமையாளர் சதீஷ் மூலம் உத்தரபபிரதேசம் பகுலியா பகுதியைச் சேர்ந்த மனோஜ் சௌகான் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகர் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
04-Dec-2024