மின் வசதி இல்லாத அங்கன்வாடி மையம்
தேனி; ஆண்டிபட்டி தாலுகா, அம்மச்சியாபுரம் தெற்கு தெருவில் இருந்த அங்கன்வாடி கட்டடம் சேதம் அடைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆற்றங்கரையில் பகுதியில் செயல்பட்ட நுாலகத்திற்கு அங்கன்வாடி மாற்றப்பட்டது. இதனால் நுாலகம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அங்கன்வாடியில் மின்விளக்கு, விசிறி உள்ளிட்ட மின் சாதனங்கள் இருந்தாலும் மின்வசதி இல்லாததால் இவற்றை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மழைகாலங்களில் குழந்தைகள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். மின் இணைப்பு வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.