உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழக்கறிஞர் கடத்தலில் மேலும் ஒருவர் கைது

வழக்கறிஞர் கடத்தலில் மேலும் ஒருவர் கைது

போடி:தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் 54., இவர் ராசிங்காபுரத்தில் ஏ.எஸ்.பார்ம் லேண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 130 ஏக்கர் நிலத்தை மேற்பார்வை செய்கிறார். இதனை ராசிங்காபுரம் ராஜா, ராஜாராம் ஆகியோர் தேனி கான்வென்ட் ரோடு சந்தன பாண்டியன் 47, என்பவருக்கு கிரையம் பேச சுரேஷிடம் முன்பணமாக ரூ.5 லட்சத்தை கொடுத்தனர்.நிலத்தின் உரிமையாளர் அஜய் சோப்ராவிடம் நேரடியாக பேசி, நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், முன் பணத்தை திரும்ப தருமாறும் சுரேஷிடம் சந்தன பாண்டியன் கேட்டுள்ளார். அந்த பணம் வழக்கு செலவுக்கு எனக்கூறி திருப்பி தர சுரேஷ் மறுத்துள்ளார்.இப்பிரச்னையில் நேற்று முன்தினம் சுரேஷ் போடியில் நடை பயிற்சி சென்ற போது, பெரியகுளம் சிவனேஸ்வரன் 49., தேனி செல்வேந்திரன் 38, சண்முகசுந்தரம் 35, போடி அட்டாக் பாண்டியன் 44, சந்தன பாண்டியன், தேனி சிவா 29, ஆகியோர் காரில் கடத்தி சென்று மிரட்டி பணம், கையெழுத்து பெற்றனர். புகாரில் போடி டவுன் போலீசார் சிவனேஸ்வரன், செல்வந்திரன், சண்முகசுந்தரம், அட்டாக் பாண்டியை நேற்று முன் தினம் கைது செய்தனர். நேற்று சந்தன பாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை