உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனப்பகுதியில் குப்பைக்கு தீ வைக்கும் சமூக  விரோதிகள்

வனப்பகுதியில் குப்பைக்கு தீ வைக்கும் சமூக  விரோதிகள்

தேனி: தேனியில் கரட்டுப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பதால் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு, வனத்தீ அபாயம் எழுந்துள்ளது. தேனி நகர்பகுதியை ஒட்டி உள்ள புது பஸ் ஸ்டாண்ட் அன்னஞ்சி விலக்கு பைபாஸ் ரோடு உள்ளது. இந்த ரோட்டை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான கரட்டு பகுதிகள் உள்ளன. இந்த வன கரட்டுப்பகுதியில் சிலர் தொடர்ந்து பாலிதீன் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை கொட்டி வந்தனர். இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் அந்த குப்பைக்கு தீ வைக்க துவங்கி உள்ளனர். இதனால் பைபாஸ் ரோட்டில் புகை மூட்டம் ஏற்படுகிறது. அவ்வழியாக செல்வோர் சுவாச பிரச்னை ஏற்படுகிறது. மேலும் இந்த வனப்பகுதியில் முயல், ஊர்வன உள்ளன. உயிரினங்கள் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் குப்பை கொட்டுவோர், அதற்கு தீ வைப்பவர்களை கண்டறிந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை