உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 90 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் விண்ணப்பம் வரவேற்பு

90 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் விண்ணப்பம் வரவேற்பு

தேனி, : மாவட்டத்தில் உள்ள பழங்குடியின விவசாயிகள் 115 பேருக்கு வேளாண் இயந்திரங்கள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் பொறியியல் துறையினர் தெரிவித்தனர்.மத்திய அரசின் திட்டத்தில் பழங்குடியினர், மலைவாழ் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தில் டிராக்டர், பவர் ட்ரில்லர், பவர் வீடர், ரொட்டவேடார், உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கி கொள்ளலாம். விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு சொந்த நிலம் இருக்க வேண்டும். விருப்பமுள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் 115 பேருக்கு இத்திட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள உதவி வேளாண் பொறியியல் அலுவலகம் அல்லது தேனியில் உள்ள வேளாண் செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என வேளாண் பொறியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ