உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இடுக்கி தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்

 இடுக்கி தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி பொது பார்வையாளராக ஐ.எப்.எஸ். அதிகாரி ராஜூ கே. பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார். இம்மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக டிச.9ல் நடக்கிறது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக தேர்தல் பொது பார்வையாளராக ஐ.எப்.எஸ். அதிகாரி ராஜூ கே. பிரான்சிஸ் நியமிக்கப்பட்டார். பொறுப்பு ஏற்க வந்தவரை இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட், தேர்தல் உதவி கலெக்டர் சுஜாவர்க்கீஸ் ஆகியோர் வரவேற்றனர். அதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ராஜூ கே. பிரான்சிஸ் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்