நண்பர்களுக்கிடையே தகராறு பீர் பாட்டிலால் குத்தி காயம்
கம்பம்: கம்பம் கே.கே. பட்டி ரோட்டில் ஏழரசு களம் அருகில் குடியிப்பவர் டிரைவர் சிலம்பரசன் 37. தனது வீட்டில் காணாமல் போன சில பொருள்கள் பற்றி விசாரிக்க அண்ணாபுரத்தை சேர்ந்த தனது நண்பர்கள் வினோத் மற்றும் பிருதிவிராஜை அழைத்துள்ளார். மூவரும் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சிலம்பரசனுக்கும் , பிருதிவிராசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . பிருதிவிராஜ் தன்னிடம் இருந்த பீர் பாட்டிலை கொண்டு சிலம்பரசனின் நெஞ்சில் குத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.சிலம்பரசன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.