கைகலப்பாக மாறிய தகராறு: நால்வர் காயம்
ஆண்டிபட்டி : குன்னுார் அருகே டீக்கடையில் நடந்த தகராறில் நால்வர் காயம் அடைந்தனர். தேனி அல்லிநகரம் சினேகா 22. இவர், தனது கணவர் செந்தில்குமார், அவரது தம்பிகள் அஜய்குமார், சிவிராஜ் ஆகியோருடன் வருஷநாடு அருகே நடந்த காதணி விழாவில் செண்டை மேளம் வாசித்து விட்டு திரும்பி வந்தனர். குன்னுார் டோல்கேட் அருகே உள்ள கடையில் டீ குடித்தனர். அப்போது அங்கிருந்த மதன்குமார், ராஜபிரபு ஆகியோர்களுடன் ஏற்பட்ட வாய் தகராறு, கைகலப்பாக மாறியது. இதில் செந்தில்குமார், அஜய் குமார், சிவிராஜ், மதன்குமார் ஆகியோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சினேகா அளித்த புகாரில் க.விலக்கு போலீசார் மதன்குமார், ராஜபிரபு பெயர் விலாசம் தெரியாத நால்வர் மீதும், மதன்குமார் அளித்த புகாரில் 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.