அரசு பள்ளி மாணவர்களை கீழடிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு
தேனி: அரசுப்பள்ளி மாணவர்கள் 247 பேரை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் 247 பேர் கீழடி அருங்காட்சியகம், மதுரையில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,' என்றனர்.