சிறுவர்கள் மோதல் ஆள்மாறி நடந்த தாக்குதல்..
மூணாறு: மூணாறில் இரு தினங்களுக்கு முன்பு காலனி ரோட்டில் சிறுவர்கள் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு சிறுவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த சிறுவர்களில் ஒரு சிறுவரின் உறவினர்கள் மோதலில் தொடர்புடையதாக கூறி மாட்டுபட்டி எஸ்டேட், குட்டியாறு பகுதியைச் சேர்ந்த கவுதமை 17, பலமாக தாக்கினர். அதில் பலத்த காயம் அடைந்தவர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோதலில் கவுதமுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்தது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.