உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை ஆதி வீராச்சாமி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் 27. தனியார் பஸ் கண்டக்டர். இவர் தனது நண்பர் குணா என்பவருடன் மேதகார படித்துறை பகுதியில் நடந்து சென்றுள்ளார். அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த லிங்கேஷ்வரன், இவரது நண்பர் பெரியபாண்டி இருவரும் வாசுதேவனிடம் எங்க ஏரியாவுக்கு நீங்கள் எப்படி வரலாம் என கூறி தாக்கினர். இதில் வாசுதேவன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் அறுந்து கீழே விழுந்தது. அதனை லிங்கேஷ்வரன், பெரியபாண்டி எடுத்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை