வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வலுக்கட்டாயமாக கடன் தந்துவிட்டு பின்னர் பல மடங்கு வசூல் செய்வது. இவர்களுக்கு இந்த பாடம் தேவை தான்.
தேனி: சின்னமனுார் அய்யனார்புரம் நவீன்குமார் 26,கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் மேலாளராக உள்ளார். இந்நிதி நிறுவனத்தில் கோம்பை வேப்பமரத் தெரு அன்பழகன் மனைவி பாக்கியலெட்சுமி வீட்டுக்கடன் திட்டத்தில் ரூ.5 லட்சம் பெற்றார்.கடன் தவணையை செலுத்தாததால் மேலாளர் நவீன்குமார் செப்.,27ல் பாக்கியலெட்சுமி வீட்டிற்கு சென்று கடன் நிலுவைத்தொகை கேட்டார். நாளை வழங்குவதாக கூறினார். மறுநாள் அங்கு நவீன்குமாரும், பாண்டியராஜனுடன் சென்று தவணைத் தொகை கேட்டார். அதற்கு பாக்கியலட்சுமி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். உடனே பாக்கியலட்சுமியும், சிலரும் ஓடிவந்து, மேலாளர் நவீன்குமாரை பிடித்துக் கொள்ள பாக்கியலட்சுமியின் மகன் சச்சின், மேலாளரின் முகத்தில் குத்தி ரத்தம் காயம் ஏற்படுத்தினர். உடன் வந்த பாண்டியராஜன் நவீன்குமாரை உத்தமபாளையம் மருததுவமனையில் சேர்த்தார். கோம்பை போலீசார் பாக்கியலட்சுமி, அவரது மகன் சச்சின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வலுக்கட்டாயமாக கடன் தந்துவிட்டு பின்னர் பல மடங்கு வசூல் செய்வது. இவர்களுக்கு இந்த பாடம் தேவை தான்.