உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவர்களிடத்தில் மரக்கன்றுகள் வளர்க்க விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களிடத்தில் மரக்கன்றுகள் வளர்க்க விழிப்புணர்வு

சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்நகரில் நெருக் கடியான குடியிருப்புக்களில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பாதாள சாக்கடை பராமரிப்பில் சுணக்கம் உள்ளது. இதனால் ஆங்காங்கே கழிவு நீர் வெளியேறி சுற்றுப் புறச் சூழல் மாசடைகிறது. இந்நகராட்சியின் முதல் வார்டு பூலானந்தபுரம் தனித்தீவாக உள்ளது. நகரில் இட நெருக்கடி இருப்பதால் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகள் புதிதாக உருவாகி வருகின்றன. ஆனால் எங்குமே மரங்கள் இல்லை. மரங்கள் வளர்ப்பில் இங்குள்ளவர் களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது. ஆனால் இடமிருந்தும், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கான ஆர்வம் இல்லாத நிலையும் உள்ளது. குறிப்பாக இங்குள்ள ஊராட்சி ஒன்றிய வீதி, சொசைட்டி தெருவில் உள்ள பல குறுக்கு விதிகள், பொன் நகர், ஹைவேவிஸ் ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, லட்சுமி நகர், அண்ணாமலை நகர், எழில்நகர், அழகர்சாமி நகர், சிவசக்தி நகர், மின் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க போதிய இடங்கள் உள்ளன. தற்போது வனத் துறையின் வைகை மண்வள பாதுகாப்பு பிரிவு மரக் கன்றுகளை வளர்த்து நடவு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக தருகிறது. அதே போன்று வேளாண் துறையும் 250 கன்றுகள் வீதம் தருகிறது. எனவே மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பொது மக்கள் மத்தியில் ஆர்வத்தை துாண்ட விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். விழிப்புணர்வு சஞ்சீவிராணி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி: சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளது. சிறு வயது முதல் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பில் ஆர்வத்தை துாண்ட வேண்டும். அதை எங்கள் பள்ளியில் நாங்கள் ஆரம்பித்து உள்ளோம். தன்னார்வலர்கள், பசுமை அமைப்புகள் மரக்கன்றுகள் வளர்ப்பில் தீவிரம் காட்டுகின்றன. அவர்களை பயன்படுத்தி சுற்றுப் புறச் சூழலை பாதுகாக்கலாம். மேகமலை அடிவாரத்தில் சின்னமனுார் வட்டாரம் உள்ளது. திராட்சை, வாழை அதிகம் சாகுபடியாகிறது. இருந்தாலும் சின்ன மனுார் போன்ற நகரங்களில் சுற்றுப்புறச் சூழல் மாசு அதிகமாக உள்ளது. இதை தடுக்க வீடு தோறும் ஒரு மரக்கன்றாவது நட்டு வளர்ப்பது கட்டாயமாக்க வேண்டும். என் பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளை அதற்கு தயார் படுத்தி வருகின்றோம். கடந்த வாரம் ஆலிலை பசுமை இயக்கத்தினர் எங்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடத்தினர். மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்., என்றார். மரக்கன்று வளர்ப்பு அவசியம் சிவராமன், மாணவர், சட்டக் கல்லுாரி, சின்னம னுார்: வீடுகளில் மூலிகை செடிகள், மலர் செடிகள் வளர்க்கலாம். அதிக ஆக்சிஜன் தரும் தாவரங்களை வீடுகளில் வளர்த்தால், சுவாசிக்க நல்ல காற்று கிடைக்கும். சின்னமனுாரில் இதற்கு என ஒரு அமைப்பை துவக்கி, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம். எங்கள் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து இதற்கு என ஒரு குழு ஏற்படுத்தலாம் என்று நினைத்து உள்ளேன். பசுமை மலைத் தொடராக உள்ள மேகமலையின் அடிவாரத்தில் இருந்தும், சின்னமனுார் மாசுபட்டு வருகிறது. அதைத் தடுக்க நடவடிக்கைகள் தேவை. மத்திய மாநில அரசுகள் இதற்கு என பல திட்டங்களை அமல்படுத்துகின்றன. குறிப்பாக வனத்துறை, வேளாண் துறை மரக் கன்றுகளையும், தோட்டக்கலைத்துறை மூலிகை நாற்றுகளையும் வழங்குகிறது. அவற்றை வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு இல்லை. அதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளேன். ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும். அப்போது தான் மாசு குறையும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை