விழிப்புணர்வு ஊர்வலம்
போடி: போடி அரசு பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் சில்லமரத்துப்பட்டியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் ராஜேஷ், மதுரை அண்ணா பல்கலை என்.எஸ்.எஸ்., மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜோசப் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் தமிழ்மாறன் வரவேற்றார். நீரை பாதுகாத்தால் நிலத்தை பாது காக்கலாம். நீர் சேமிப்பு, வாழ்வின் பாதுகாப்பு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திய படி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.