மேலும் செய்திகள்
அசாம் மாநில கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்
17 hour(s) ago
தேனி: தேனி அரண்மனைப்புதுார் ராஜாக்களம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் 30. இவரது மனைவி ரஞ்சிதா 28. கருவுற்ற ரஞ்சீதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மாலை 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரஞ்சிதாவை ஆம்புலன்ஸில் நேற்று மாலை 4:30 மணிக்கு ஏற்றி, தேனி மதுரை ரோட்டில் குன்னுார் வைகை ஆற்றுப்பாலத்தின் அருகே செல்லும் போது, ரஞ்சிதாவிற்கு அதிக பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் காஜா மைதீன் வாகனத்திலேயே 25 நிமிடங்கள் பிரசவம் பார்த்தார். சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் வார்டில் அனுமதித்தனர். இதனால் தற்போது தாய், சேய் நலமாக உள்ளனர். பிரசவம் பார்த்த காஜாமைதீன், வாகனம் இயக்கிய டிரைவர் பாண்டியனை நலப்பணிகள் இணை இயக்குனர் கலைச்செல்வி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் முத்துசித்ரா, 108 ஆம்புலன்ஸ் வாகன நிர்வாக மேலாளர் ரத்தினவேல் பாராட்டினர்.
17 hour(s) ago