தேனி: தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில் 16,12,503 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் 80 ஆயிரம் வாக்காளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி வாக்காளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். ஆர்.டி.ஓ.,க்கள் பால்பாண்டி, முத்துமாதவன் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்,அதிகாரிகள் பங்கேற்றனர்.தேனி லோக்சபா தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, பெரியகுளம் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் என 6 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றள்ளன. இத்தொகுதியில் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஆண்கள் 7,58,557 பேர் , பெண்கள் 7,73,506 பேர், மற்றவர்கள் 177 பேர் என 15,32,240 பேர் இடம்பெற்றிருந்தனர்.நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 7,92,195பேர், பெண்கள் 8,20,091பேர், இதரர் 217 பேர் என 16,12,503 பேர் இடம்பெற்றுள்ளனர். இத் தொகுதியில் ஆண்களைவிட 27,896 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதில் உசிலம்பட்டி சட்டசபை தொகுதியை தவிர மற்ற 5 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதில் பெரியகுளம் அதிக வாக்காளர்களர்களை கொண்ட தொகுதியாகவும், குறைந்த வாக்காளர்களை கொண்டதாக சோழவந்தான் தொகுதி உள்ளது.மாவட்டத்தில் 2023 அக்.,27ல் வெளியிடப்பட்ட(4தொகுதிகள்) வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 5.39லட்சம் பேர், பெண்கள் 5.61 லட்சம் பேர், மற்றவர்கள் 193 பேர் என 11.01 லட்சம் பேர் இடம்பெற்றிருந்தனர். இதில் புதிதாக 20ஆயிரத்து 227 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, முகவரி மாற்றம் போன்றவற்றால் 9,336 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்பட்டியிலில் ஆண்கள் 5.44 லட்சம், பெண்கள் 5.67 லட்சம், மற்றவர்கள் 193 பேர் என 11.12 லட்சம் பேர் வாக்களார் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியில் நகராட்சி, தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ள ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் https://voters.eci.gov.inஎன்ற இணையதம், வாக்காளர் உதவி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சட்டசபை தொகுதி/ ஆண்கள்/ பெண்கள்/ இதரர்/ மொத்தம்/ஆண்டிப்பட்டி/ 1,34,851/1,38,908/30/2,73,789/பெரியகுளம்(தனி)/ 1,39,683/1,45,397/111/2,85,191/போடி/ 1,32,912/1,39,491/19/2,72,422/கம்பம்/ 1,36,893/1,44,171/33/2,81,097/சோழவந்தான் (தனி)/1,08,947/1,13,572/18/2,22,537/உசிலம்பட்டி/ 1,38,909/1,38,552/6/2,77,467/மொத்தம்/7,92,195/8,20,091/217/16,12,503/