மேலும் செய்திகள்
'மொபைல்' டவர் திருட்டு
21-Jul-2025
போடி; சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் 42. தனியார் அலைபேசி நிறுவனத்தில் டவர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி ஆனந்தனுக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு டவர் வைத்து நடத்தினார். சில மாதங்களுக்கு முன் ஜெயக்குமார் உடன் பணி புரியும் முத்துக்குமார், செந்தில்குமார் ஆகியோர் டவரை பார்க்க வந்துள்ளனர். அப்போது ரூ.10.67 லட்சம் மதிப்புள்ள பேட்டரி, மின் பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. ஜெயக்குமார் புகாரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து பேட்டரி, மின் சாதனங்களை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
21-Jul-2025