உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருதரப்பு தகராறு: 9 பேர் மீது வழக்கு

இருதரப்பு தகராறு: 9 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: ஜெயமங்கலத்தில் மூதாட்டி துணி துவைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் ஜெயமங்கலம் போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் கருப்பாயி 75. தனியாக வசித்து வருகிறார்.இவரது வீட்டருகே அஜித்குமார் வசிக்கின்றார். கருப்பாயி துணி துவைக்கும் போது தண்ணீர் தங்கள் வீட்டு சுவரில் படுகிறது என அஜித்குமார், கருப்பாயியை திட்டியுள்ளார். 'ஏன் என்னை திட்டுகிறாய்,' என கேட்ட கருப்பாயியை, அஜித்குமார் அவரது உறவினர்கள் முருகன், ரமேஷ் ஆகியோர் கையால் அடித்துள்ளனர். உறவினர்களானஅமராவதி, கணேஷ்வரி, சுகந்தி, வள்ளி, காளீஸ்வரி ஆகியோர் திட்டியுள்ளனர். கருப்பாயி புகாரில், அஜித்குமார் உட்பட 8 பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேனி மருத்துவக் கல்லூரியில் கருப்பாயி அனுமதிக்கப்பட்டார். அமராவதி புகாரில், கருப்பாயி தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரினை சாய்க்கும் எண்ணத்தில் குழி தோண்டினார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு, கருப்பாயிக்கு ஆதரவாக பாண்டியராஜன் என்பவர்,தனது மகன் ரமேைஷ கம்பால் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ரமேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி