உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கேரளாவில் பறவை காய்ச்சல்

 கேரளாவில் பறவை காய்ச்சல்

போடி: கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்த நிலையில் தமிழகத்தில் தேனி சோதனை சாவடிகளான முந்தல், குமுளி, கம்பம்மெட்டில் கால்நடை பராமரிப்பு துறை நோய் புலனாய்வு பிரிவு, அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மத்திய ஆய்வகம் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தது. இதனையொட்டி கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் குமுளி, கம்பம்மெட்டு, முந்தல் சோதனை சாவடி வழியாக தமிழகம் வரும் வாகனங்களை கால்நடை பராமரிப்பு நோய் புலனாய்வு பிரிவு, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுமதிக்கின்றனர். காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 8: 00 மணி வரை இரண்டு குழுவாக பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோல சுகாதாரத்துறையில் சுகாதார ஆய் வாளர், நகராட்சி மருந்து தெளிப்பவர் என மூன்று குழுவாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து வரும் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களை இக்குழுவினர் சோதனை செய்கின்றனர். வாகனங்களின் டயர்களில் குளோரின் டை ஆக்சைடு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சோதனை சாவடி அமைந்துள்ள ரோடுகளில் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சுகாதாரத் துறையினர் பரிசோதிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கு தடை இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி