உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னக்கானலில் பா.ஜ., முற்றுகை போராட்டம்

சின்னக்கானலில் பா.ஜ., முற்றுகை போராட்டம்

மூணாறு: சின்னக்கானல் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து பா.ஜ., வினர் பேரணியும், முற்றுகை போராட்டமும் நடத்தினர். அந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு, ரோடுகளை சீரமைக்காதது, குடிநீர் திட்டத்தில் அலட்சியம், கட்டுமானங்களுக்கு தடை உள்ளபோதும் தங்கும் விடுதிகள் கட்ட அனுமதி ஆகியவற்றை கண்டித்து சின்னக்கானல் பகுதி பா.ஜ., வினர் பேரணியும், சின்னக்கால் ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடத்தினர். பா.ஜ., மாவட்ட தலைவர் ஷானு துவக்கி வைத்தார். பொது செயலாளர் அழகுராஜ், மண்டல தலைவர் முருகன், துணை தலைவர் மோகனன், பொது செயலாளர் கந்தகுமார், செயலாளர் மனோஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை