உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., பூத் கமிட்டி மண்டல மாநாடு

 பா.ஜ., பூத் கமிட்டி மண்டல மாநாடு

சின்னமனுார்: சின்னமனுாரில் கம்பம் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். சட்டசபை தேர்தல் அமைப்பாளர் வினோத் குமார், தொகுதிப் பொறுப்பாளர் ராமநாதன், இணைப் பொறுப்பாளர் பொன் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் சிங்கம் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் கம்பம் தொகுதியை கைப்பற்ற பின்பற்ற வேண்டிய வியூகங்களை விளக்கினர். கிளஸ்டர் பொறுப்பாளர் ரவி பாலா , மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் லோகேந்திரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி