உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 18ம் கால்வாய் நீரை போடி வரை திறக்க கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்

18ம் கால்வாய் நீரை போடி வரை திறக்க கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்

போடி : முல்லைப் பெரியாறு பகுதியில் இருந்து 18ம் கால்வாய்க்கு நான்கு ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் உத்தமபாளையம், தேவாரம், சங்கராபுரம், போடி உள்ளிட்ட பகுதியில் உள்ள கண்மாய்கள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டும் குறைந்து உள்ளது. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனை ஒட்டி முல்லைப் பெரியாறு பகுதியில் இருந்து போடி கூவலிங்க ஆறு கடைமடை வரை தண்ணீர் திறந்து விட கோரி பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் போடி அருகே நாகலாபுரத்தில் சின்னமனூர் மேற்கு மண்டல தலைவர் மகேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், மலைச்சாமி, போடி மேற்கு மண்டல தலைவர் ரவி, உத்தமபாளையம் கிழக்கு மண்டல தலைவர் அரசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜீவா, மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை