உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருத்துவ கல்லுாரியில் புத்தக கண்காட்சி

மருத்துவ கல்லுாரியில் புத்தக கண்காட்சி

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ புத்தக கண்காட்சி ஜன.,8 முதல் 10 வரை மூன்று நாட்கள் நடந்தது. கண்காட்சியை துவக்கி வைத்து கல்லூரி முதல்வர் முத்துசித்ரா கூறியதாவது: தேனி மருத்துவக் கல்லூரி இளநிலை, முதுநிலை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்தாண்டு பல்வேறு புத்தக நிறுவனங்கள் பங்கேற்று அண்மை பதிப்புகளுடன் உள்ள 8500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளனர், என்றார். பேராசிரியர்கள், மாணவ மாணவிகளும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கினர். நிகழ்ச்சியில் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் ஆனந்த், துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, நூலக செயலாளர் பேராசிரியர் பாலசுப்பிரமணி, நிலைய மருத்துவ அலுவலர் சிவகுமாரன், உதவி நிலைய மருத்துவர் ஈஸ்வரன், நூலக கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை