மேலும் செய்திகள்
11 பேருக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
தேனி : பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கலாண்டிற்கு வழங்கப்படுவதற்கான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அப்பள்ளியில் பணிபுரியும் சிலர் உதவி யுடன் சரக்கு வேனில் வந்தவர்கள் திருடி சென்ற னர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜாவை ராசிங்காபுரம் உயர்நிலைப்பள்ளிக்கும், துாய்மைப்பணியாளர் விஜயனை போடி 7 வது வார்டு நகராட்சி பள்ளிக்கும் பணி மாறுதல் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பாரதிராஜா, துாய்மைப்பணியாளர் விஜயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., உஷா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியனுக்கு விளக்கம் கேட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
05-Sep-2025