உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம்; ஆற்றில் விழுந்து சிறுவன் பலி

பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம்; ஆற்றில் விழுந்து சிறுவன் பலி

மூணாறு : இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே மூலத்துறையில் பொங்கல் பண்டிகை கொண்டாட தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்த இரண்டரை வயது சிறுவன் பன்னியாறு ஆற்றில் விழுந்து பலியானார்.தேனி அருகே சோலைதேவன்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புவனேஸ்வரி மூலத்துறையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மகன்கள் லலித்குமார், இரண்டரை வயதுடைய மித்ரனுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்தார்.வீட்டின் அருகில் உள்ள பன்னியாறு ஆற்றின் கரையோரம் நேற்று மதியம் 2:45 மணிக்கு சகோதரர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மித்ரன் திடிரென ஆற்றில் இறங்கியதால் அதனை தாயாரிடம் கூற லலித்குமார் வீட்டிற்குச் சென்றார். புவனேஸ்வரி வந்து பார்த்த போது மித்ரனை காணவில்லை. தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரியவந்தது. நெடுங்கண்டம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தேடினர். மித்ரன் காணாமல் போன இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு உடலை மீட்டனர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை