உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் பி.எஸ்.என்.எல்., விழிப்புணர்வு  ஊர்வலம்

தேனியில் பி.எஸ்.என்.எல்., விழிப்புணர்வு  ஊர்வலம்

தேனி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெள்ளி விழாவைஅக்.1ல் கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு தேனி பி.எஸ்.என்.எல்., கோட்ட அலுவலகத்தில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.., ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாலையில் நிறுவனம் மூலம் வழங்கப்படும் சேவைகள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. கோட்டப் பொறியாளர் சோபியா துவக்கி வைத்தர். துணை கோட்டப் பொறியாளர்கள் ராமர், அழகுராஜா முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்து நேருசிலை வழியாக கம்பம் ரோடுகொட்டக்குடி ஆற்றுப்பாலம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் அலுவலகம் வந்து நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தொலை தொடர்பு அலுவலர்கள் கணேசன், முனியாண்டி, முருகபிரபு, கார்த்திகேயன், பெரியநாயகி, சுசீலா, சத்தியபாமா, ஒப்பந்த ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !