உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள  எண் வழங்கும் முகாம்

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள  எண் வழங்கும் முகாம்

தேனி: விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என, வேளாண்துறை இணை இயக்குனர்சாந்தாமணி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: அரசின் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற நில விபரங்களை சரிபார்த்து, தனித்துவ அடையாள எண் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடத்தஉள்ளோம். அனைத்து வருவாய் கிராமங்களிலும் முகாம்கள் நடந்து வருகின்றன. ஆதார் எண்போன்று விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண்ணாக விளங்கும். இனிவரும் காலங்களில் அரசின் அனைத்துத் திட்டங்களையும் விவசாயிகள் எளிதில் பெறலாம். ஒவ்வொருமுறை விண்ணப்பிக்கும் போதும் ஆவணங்களை சரிபார்க்கும் நேர விரயம் ஏற்படாது. திட்டம் சரியானபயனாளிக்கு சென்றடைவதை அரசும் உறுதிப்படுத்த முடியும். இதனால் விவசாயிகள் நேரடியாக இணையத்தில் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மாவட்டத்தில் தற்போது 33 ஆயிரம் விவசாயிகள் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்ட நிதியை பெற்று வருகின்றனர். முதல் கட்டமாக அவர்களது தரவுகளை கண்டறிந்து, தனித்துவ அடையாள எண் வழங்க உள்ளோம். இப் பணியில் வேளாண், தோட்டக்கலை,வேளாண் வணிகம், விற்பனை, சமுதாய வளப் பணியாளர்கள் அடங்கிய குழுவினரை அமைத்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை