உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ஆண்டிபட்டி: ராஜதானி எஸ்.ஐ., முகமது யஹ்யா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். கரட்டுப்பட்டி தோட்டம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் அழகாபுரியைச் சேர்ந்த ராஜா 50 என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் கவரில் 25 கிராம் கஞ்சா, ரூ.500 பணம் இருந்துள்ளது. கஞ்சாவை சில்லரையில் விற்பனை செய்வது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி