உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோஷ்டி தகராறில் 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி தகராறில் 8 பேர் மீது வழக்கு

போடி: போடி அருகே ரங்கநாதபுரம் மாரியம்மன் கோயில் தெரு ஸ்ரீராம் 18. இவர் வீட்டின் அருகே உட்கார்ந்து அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆதி நாகராஜ், அங்கு உட்கார்ந்து அலைபேசி பார்க்கக் கூடாது என அதட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின் ஸ்ரீராம் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஆதிநாகராஜ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். ஆதிநாகராஜ், ஸ்ரீ ராமின் நுனி விரலை கடித்து காயம் ஏற்படுத்தினார். ஆதி நாகராஜன் தந்தை சின்னகாளை உட்பட உறவினர்கள் 4 பேர் சேர்ந்து ஸ்ரீ ராமை தாக்கி காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுபோல ஸ்ரீராம் இவரது தந்தை காசிநாதன் உட்பட உறவினர்கள் நால்வர் இணைந்து, ஆதி நாகராஜை தாக்கி காயம் ஏற்படுத்தினர்.ஸ்ரீராம் புகாரில் ஆதிநாகராஜ், சின்னக்காளை உட்பட 4 பேர் மீதும், ஆதி நாகராஜ் புகாரில் ஸ்ரீராம், தந்தை காசிநாதன் உட்பட 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை