உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறில் எட்டு பேர் மீது வழக்கு

தகராறில் எட்டு பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டி 22. சில தினங்களுக்கு முன்பு இவரது அண்ணன் விக்னேஷ் பாண்டி, சித்தப்பா மகன் முத்தையா இருவரும் வத்தலகுண்டு சென்று விட்டு ஊருக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பஸ்சில் பயணம் செய்த செங்குளத்துப்பட்டி நித்திஸ் என்பவர் மீது தெரியாமல் இடித்து விட்டனர்.இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு நித்திஸ் இவரது உறவினர்கள் பாண்டி, தமிழரசன், குமார், தெய்வம்,பெரியகருப்பன், தீபா, தங்கம்மாள் ஆகியோர் விக்னேஷ் பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர். விக்னேஷ் பாண்டியை, பாண்டி, பெரியகருப்பன் கத்தியால் குத்தியும், நித்திஸ் கத்தியால் விக்னேஷ் பாண்டி கன்னத்தில் குத்தி காயப்படுத்தினர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விக்னேஷ் அனுப்பி வைக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் 8 பேர் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ